Saturday, December 29, 2012

அரளி விதை

தனிமையில் இருந்தேன் உன்னோடு
தவிப்புகள் என் மனதில்
தருவாளா ஒரு முத்தம்தனை
தந்தாள் உதட்டில் அல்ல
கைகளில்

காதல் முத்தமா அது?
அல்ல அன்பு முத்தமா!!!

விளையாட்டாய் தந்த முத்தம்
வினை விதைத்தது காதல் வித்துகளை

வித்துகள் செடியகின
கண்ணீர் விட்டு வளர்த்தேன் காதல் செடியை

செடி மரமாகியது
இரத்தம் சிந்தி வளர்த்தேன் காதல் மரத்தை

கனிந்ததா காதல் பழம்?
கனிந்தது ருசித்தும் பார்த்தேன்

சில ஆண்டுகளுக்கு பிறகு

கல்லறையில் கண்மூடி தூங்கி கொண்டிருந்தேன்
அவள் மூச்சுகாற்றுபட்டு எழுந்து பார்த்தேன்

காதல் கணவனோடு கைகோர்த்து நின்றாள்
என் மன அஞ்சலிக்காக 
அழகான ரோஜாவை என் பாதத்தில் வைத்தாள்

என் அழகிய காதலியே -அன்று
அரளி விதையை விதைத்தாயே
இன்று ரோஜாவை விதைக்கிறாயே
இதை அன்றே விதைதிருக்கலமே
நானும் கல்லறயை கரம் பிடித்திருக்கமாட்டேனே

அழகும் அருவெருப்பும்

அழகும் அருவெருப்பும்


ஆடையில்லாமல் பிறந்தாயே இளைஞ்சனே
ஆனாலும் அழகாகவே தெரிந்தாய்
அன்று...

ஆடையில்லாமல் கிடக்கிராயே இளைஞ்சனே
டாஸ்மார்க் போதையில் அருவெறுப்பாய் தெரிகிறாய்
இன்று.....
காதல் பார்வை


சுட்டெரிக்கும் காதல் பார்வை
ஜித்தன் ஆக்கியது என்னை
அடைக்கலம் தருவாயோ பெண்ணே!!!
பித்தன் ஆகும் முன்னே!!!

Monday, December 24, 2012

மணவறை to கல்லறை


அவள் நடந்து சென்ற இடங்களில்
தேடுகிறேன்
அவள் காலடித்தடங்களை

அவள் நின்று சென்ற இடங்களில்
தேடுகிறேன்
அவள் நினைவுகளை

அவள் பார்வை பட்ட இடங்களில்
தேடுகிறேன்
தொலைந்து போன என் பார்வையை

அவள் விளையாடி சென்ற  என் இதயத்தில்
தேடுகிறேன்
அவள் காதலை

தேடினேன் !!! தேடினேன் !!! தேடினேன் !!!
என்னையே நான் தேடினேன்
அவளையும் தேடினேன்
அவள் மணவறையில்
நான் கல்லறையில்.

Tuesday, December 18, 2012

கண்ணீர் தீபாவளி


தீபாவளி நாள்
காலையில் நண்பன் வீட்டுக்கு வந்தான்

என்ன ராசா பார்த்து எம்புட்டு நாளாச்சி
அன்புடன் நலம் விசாரித்தல் அம்மா

நண்பா! எங்க வீட்டுல
எங்க அண்ணாக்கு பைக்
என் அக்காக்கு கம்ப்யூட்டர்
எனக்கு  பத்தாயிரத்துக்கு வெடி
அப்புறம் எல்லோருக்கும் புது டிரஸ்

எனக்கு என்னவோ ஒன்னும் தோணவில்லை
அம்மாவின் கண்களில் கண்ணீர்
ஏனம்மா? என்றேன்

நான்தான் உனக்கு ஒன்றுமே வாங்கித்தரலியட
புதுசா டிரஸ் வாங்கி கொடுத்தலமா!!!

அறியாதபிள்ளை அம்மாவின் கண்களை துடைத்துவிட்டு
நண்பனோடு தீபாவளி கொண்டாட சென்றான்

அம்மாவின் மனம் அணுகுண்டாய்
வெடித்து சிதறியது

பக்கத்து வீட்டு பணகார பையன் போட்ட
சட்டையை வெளுத்து கொடுத்துத்துறோமே
என் பையனுக்கு.....

Monday, December 17, 2012

சிக்கிகொண்டேன் அவள் வலையில்


மலை மேகங்கள் திரண்டுவர
வண்ணத்துபூச்சிகள் வானவில்லை
வட்டமடித்து கொண்டிருந்த வேளையில்

கண்ணைமூடி கனவுகளோடு நின்றேன்
குளிர் காற்று சில்லென்ற்று
முகத்தினில் முத்தமிட்டுசென்றன

விழித்திரையில் சிறு சலனம்
கருவிளியினில் காதலியின் நினைவுகள்
நினைவுகளை பின் தொடர்ந்தேன்.....

வானில் தோன்றிய மின்னல்ஒளி
வெட்கத்தில் எட்டிபார்த்துவிட்டு ஒளிந்தது
சூரியனும் கருமேகத்தினுள் காணாமல் போனான்

மழைத்துளிகள் மலராய் விழுந்தன
விழித்து கொண்டேன்
தார்சலையில் தாமரையின் தரிசனம்

திரும்பிபார்த்தாள் தேகம் சிலிர்த்தது
சிதறிவிழுந்தது என் இதயம்
சிக்கிகொண்டேன் அவள் வலையில்...

Saturday, December 15, 2012

நீ என்ன இத்தனைஅழகா


உன் அருகில் வந்தால்
உதட்டால் முத்தம்மிடுகிறாய்
கைகளால் அணைத்தும் கொள்கிறாய்

இயற்கையின் சொத்தான
முத்து -அது
உன் கண்கள் அல்லவா

அட இந்த சூரிய சந்திரன் கூட
உன் மடியில் கிடக்கிறார்கள்
இரவும் பகலும்

கற்றுக்கும் ஆசை உன்மேல்
அடக்கடி உன் ஆடை-
விலக்கி செல்கின்றன

காதலர்களுக்கும் உன் மேல் காதலோ
காவியம் படைகிறர்கள்
உன்னுள் வந்து

இவ்ளவு அழகான நீ
அடக்கடி சுனாமி போல்
கோப முகம் கொள்கிறயே

ஏன்? என் கடல் காதலியே!!!!

Friday, December 14, 2012

நவயுக காந்தாரி


காதல் காம வெறிபிடித்து
கண்களை துணியால் கட்டிவிட்டு
கைகளில் வாள் எடுத்து
தென்றலாய் வருணிக்கபட்டவள்
புயலாய் வீசினாள்

புல் தரையில் விழ்ந்தன
பல ஆண்களின் தலைகள்

அப்போதும் கண்கட்டியே இருந்தாள்
நீதி தேவதை
அவளும் பெண்ணல்லவா!!!!!!!!!

துரோகி


என் ஐந்து விரலிடையில்
ஆறாம் விரலாய்
வந்தாய்

நானும் தீயிட்டு வளர்த்தேன்

நன்றி கெட்டவன்
என்னையே அழித்துவிட்டான்
சிகரெட்

போதயில் ஓர் கடிதம்


பாட்டிலில் குடிஇருந்தேன்
பருகினாய் என்னை
பாசத்தை மறந்தாய்-நாட்டின்
பண்பை கசக்கி எறிந்தாய்
பாலுட்டிய அன்னையே அறைந்தாய்
பாம்பாய் கொத்தினாய் உன் நண்பர்களையும்

நண்பா!!!!!!!!!

பாசகையிறு தூக்கி வருகிறான் எமன்
பாடைக்கு சொல்லிவை

இப்படிக்கு உன் அன்பு நண்பன்
Honeybee,Mc,RayalChallange etc...

கல்லறை மணல்களின் புலம்பல்கள்


மழைத்துளிகள் மண்ணில் முத்தம் இடுகின்றன
மண்ணின் மீது மழைக்கு காதலோ?

கடல் அலைகள் கரைமணல் தொடுகிண்றன
கரைமணல் மீது கடலுக்கும் காதலோ?

காற்றும் பச்சக்குதிரை எற்றி செல்கிறது மண்ணை
காற்றும் காதலிக்கிறதோ மண்ணை!!!

மரங்களுக்கும் கூட உன் மீதே நிற்க ஆசை
மரங்களுக்கும் உன் மீது காதலோ?

ஆனால் நான் மட்டும் அவளை காதலித்தேன்
அவள் என்னையும் மண்ணோடு மண்ணாகி
மண்ணை காதலிக்க வைத்துவிட்டால்...

இது கவிதை இல்லை சில கல்லறை மணல்களின் புலம்பல்கள்!!!!!!!!!!!!!!

Thursday, December 13, 2012

நிலவே என் தலைகுனிந்த நன்றி


பௌர்ணமி நிலவே என்னவளின்
கூந்தலில் இருப்பதால் உனக்கு
நன்றி!!!!

அமாவசை  நிலவே என்னவளின்
உதட்டில் மச்சமாக இருப்பதால் உனக்கு
நன்றி!!!!

மூன்றாம் நிலவே என்னவளின்
உதடாக இருப்பதால் உனக்கு
நன்றி!!!!

வளர்பிறை நிலவே என்னவளின்
கண் இமைகளாக இருப்பதால் உனக்கு
நன்றி!!!!

தேய்பிறை நிலவே என்னவளின்
குங்குமம் இடும் இடமாக இருப்பதால் உனக்கு
நன்றி!!!!

முப்பது நாட்களும் என்னவள் என்னை
சுட்டிவருவதற்கு காரணமாக இருந்த
நாளாவே உனக்கு
என் தலைகுனிந்த நன்றி!!!!