Wednesday, March 16, 2016

அவள் சேலை கட்டி வரும் அழகு

சூரியன் மேகத்தினுள்   மறைவான் வெட்கத்தில்
அவள் சேலை கட்டி வரும்
அழகை கண்டால்

மரங்கள் தலை கவிழ்ந்து நிற்கும்
அவள் சேலை கட்டி வரும்
அழகை கண்டால்

காத்தும் மூச்சிவிட மறந்து இருக்கும்
அவள் சேலை கட்டி வரும்
அழகை கண்டால்

மண்  அவள் காலடியில்  மண்டியிடும்
அவள் சேலை கட்டி வரும்
அழகை கண்டால்

இயற்பியல் தன் இயக்கத்தை நிறுத்தும்
அவள் சேலை கட்டி வரும்
அழகை கண்டால்

தமிழும் தன் பங்குக்கு வார்த்தை இல்லாமல் திணறும்
அவள் சேலை கட்டி வரும்
அழகை கண்டால்

ஆண் இனம் அடிமை இனமாய் மாறும்
அவள் சேலை கட்டி வரும்
அழகை கண்டால்

பிரமனும் பிறவி பயன் அடைவான்
அவள் சேலை கட்டி வரும்
அழகை கண்டால்

நானோ
திறந்த விழி மூடவில்லை
நாவெல்லாம் நரம்பு அறுந்து பேச மறுக்கிறது
உடம்போ சிலிர்கிறது
சிரிக்கிறேன் பைத்தியம் போல்
உள்ளமோ நான் நான் என்பதை மறந்து நாணா படுகிறது


அவள் சேலை கட்டி வரும்
அழகை கண்டதால்


1 comment: