Saturday, December 29, 2012

அரளி விதை

தனிமையில் இருந்தேன் உன்னோடு
தவிப்புகள் என் மனதில்
தருவாளா ஒரு முத்தம்தனை
தந்தாள் உதட்டில் அல்ல
கைகளில்

காதல் முத்தமா அது?
அல்ல அன்பு முத்தமா!!!

விளையாட்டாய் தந்த முத்தம்
வினை விதைத்தது காதல் வித்துகளை

வித்துகள் செடியகின
கண்ணீர் விட்டு வளர்த்தேன் காதல் செடியை

செடி மரமாகியது
இரத்தம் சிந்தி வளர்த்தேன் காதல் மரத்தை

கனிந்ததா காதல் பழம்?
கனிந்தது ருசித்தும் பார்த்தேன்

சில ஆண்டுகளுக்கு பிறகு

கல்லறையில் கண்மூடி தூங்கி கொண்டிருந்தேன்
அவள் மூச்சுகாற்றுபட்டு எழுந்து பார்த்தேன்

காதல் கணவனோடு கைகோர்த்து நின்றாள்
என் மன அஞ்சலிக்காக 
அழகான ரோஜாவை என் பாதத்தில் வைத்தாள்

என் அழகிய காதலியே -அன்று
அரளி விதையை விதைத்தாயே
இன்று ரோஜாவை விதைக்கிறாயே
இதை அன்றே விதைதிருக்கலமே
நானும் கல்லறயை கரம் பிடித்திருக்கமாட்டேனே

No comments:

Post a Comment