Wednesday, January 4, 2017

மாடி சாய்ந்த தருணம்


என் மாடி சாய்ந்த  தருணம்
என்னையும்  தாயான உணரவைத்தாள்கனவுகள் நிஜமாகும்

அவள்  கனவுகளை  திருடி
என் கருவறையில்
புதைத்தேன்
நிஜமாகும் வேளை
இமை மூடும் தூரமே


அவள் நினைவுகள்


எனக்கென வயசுக்குவந்த வான் மழையோ 
உன்னில் நனைய  உருகி நிற்கிறேன் 
என்னில் வருவாயோ நம்மில் கரைய 

மணல் அலை மேடாக உன் மேனி 
மனமோ மக்கி கிடக்குது மடி மேல 
தலை தூக்கி திரியுறேன் 
தணித்து விட தரிசனம் போதுமடி 

நம் இரவை பகலாக்க
சிம்மினி விளக்குல திரி போட்டு
தீ பந்தம் ஏத்திடவா 

இடுப்பு கொடி மணி ஓசை கேட்டு 
உண்டியலில் சேர்த்து வைத்த 
சில்லறை துட்டைய் சிதறியது என் மனம் 

காது மடலில் என்  உதட்டால் போடும் கோலம் 
தொட்டாய்சிணுங்கியாய் சிணுங்குகிறாய் 
மூச்சு காத்து புயல் காத்தாய் வீச 
மூர்ச்சை அடைந்து 
மார்பு புதரில் புதைந்துவிட்டாய் Wednesday, March 16, 2016

அவள் சேலை கட்டி வரும் அழகு

சூரியன் மேகத்தினுள்   மறைவான் வெட்கத்தில்
அவள் சேலை கட்டி வரும்
அழகை கண்டால்

மரங்கள் தலை கவிழ்ந்து நிற்கும்
அவள் சேலை கட்டி வரும்
அழகை கண்டால்

காத்தும் மூச்சிவிட மறந்து இருக்கும்
அவள் சேலை கட்டி வரும்
அழகை கண்டால்

மண்  அவள் காலடியில்  மண்டியிடும்
அவள் சேலை கட்டி வரும்
அழகை கண்டால்

இயற்பியல் தன் இயக்கத்தை நிறுத்தும்
அவள் சேலை கட்டி வரும்
அழகை கண்டால்

தமிழும் தன் பங்குக்கு வார்த்தை இல்லாமல் திணறும்
அவள் சேலை கட்டி வரும்
அழகை கண்டால்

ஆண் இனம் அடிமை இனமாய் மாறும்
அவள் சேலை கட்டி வரும்
அழகை கண்டால்

பிரமனும் பிறவி பயன் அடைவான்
அவள் சேலை கட்டி வரும்
அழகை கண்டால்

நானோ
திறந்த விழி மூடவில்லை
நாவெல்லாம் நரம்பு அறுந்து பேச மறுக்கிறது
உடம்போ சிலிர்கிறது
சிரிக்கிறேன் பைத்தியம் போல்
உள்ளமோ நான் நான் என்பதை மறந்து நாணா படுகிறது


அவள் சேலை கட்டி வரும்
அழகை கண்டதால்


ஏக்கம்

வெள்ளை நிற சேலை கட்டி
வந்த வண்ண நிலவே
அந்த வானமும் உன் அழகில்
சொக்கி போனதே
இமயமும் சுக்குநூறாய்
இடிஞ்சி போனதே
இதயம் தனில் உன் நினைப்பு
இம்சை பண்ணுதே
எப்ப வருவேன்னு மனசும்
ஏங்கி கிடக்கே
சண்டையே போட்டாலும்
சம்சரமாய் ஆனவளே
உன் அன்பில் சிக்கி
என் உயிரை தொலைச்சேன்
கடைசிவரை கைகோர்த்து
நடக்கணும்
காலமெல்லாம்
உன் காலடியில் கிடந்துபேன்Tuesday, March 8, 2016

என்னகென பிறந்தவளே

என்னகென பிறந்தவளே 
என் இதயத்தை அவளில் புதைத்தவளே 
என் உயிரை அவளில் சுமப்பவளே
என் சோகத்தை அவள் சோகமாய் பாவிப்பளே
என் தோள் சேர்ந்து என் வாழ்வோடு பயணிப்பவளே
என் காதல் மனைவியே உனக்கு என் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்Sunday, February 21, 2016

என் வாழ்வின் வெளிச்சம்

இருட்டில் வாழ்கிறேன்
என் வாழ்வின் வெளிச்சம் அவளே !!!!!

கனவில் வாழ்கிறேன்
என் வாழ்வின் நிஜமும் அவளே !!!!!

அவள் நினைவில் வாழ்கிறேன்
என் வாழ்வின் நேரலையும் அவளே !!!!!

அவள் இதயத்தில் வாழ்கிறேன்
என் வாழ்வின் இதயமும் அவளே !!!!!

அவள் பேச்சில் வாழ்கிறேன்
என் வாழ்வின் மூச்சும் அவளே !!!!!

மொத்தத்தில் அவள் நானே
நான் அவளே !!!!!


Friday, February 5, 2016

வந்து என்னோடு கலந்துவிடு

என் உயிரில் உன் உயிர் நுழைத்து 
ஓர் உயராய் கலந்துவிட்டோம்

கண்களாலே காதல் படம் சொல்லித்தந்து
கனவுகளில் மிதந்துவிட்டோம்

நேசிக்க வைத்து விட்டு நம்
நினைவுகளில் மூழ்கிவிட்டோம்

சண்டை போட்டு கொண்டு இங்கு நானும்
அங்கு நீயும் தவித்து விட்டோம்

போதும் என் காதல் தேவதையே
போதும் தவிப்பும், மிதப்பும்
வா வந்து என்னோடு
கலந்துவிடு, மூழ்கிவிடு

ஆசை


உன் வீ ட்டில் உன் கால் பிடித்து விளையாட ஆசை !!!
நீ காப்பி எடுத்து வரும் போது உன் விரல் நுனி பட ஆசை !!!
நீ என் தோள் பிடித்து நடக்க ஆசை !!!

பேருந்தில் உன் பின்னல் நின்று வர ஆசை !!!

ஒரே நேரத்தில் இருவரும் சேர்ந்து இரவு நிலா பார்க்க ஆசை !!!

குழந்தை போல் உன் மடியில் படுக்க ஆசை !!!
உன் காதுமடல் அருகே முத்தம் கொடுக்க ஆசை !!!
கன்ன குழியில் கை விரல் விட்டு ஆழம் பார்க்க ஆசை !!!
முண்டகண் பார்வையில் மூழ்கிவிட ஆசை !!!
ஓர கண் பார்வையில் உயிர் விட ஆசை !!!
உன்னை கட்டி அணைக்க ஆசை !!!
முத்த மழையில் நனைக்க ஆசை !!!
உதட்டில் என் உதடு பதிக்க ஆசை !!!
உன் மார்பில் புதைந்து கொள்ள ஆசை !!!
என் புதரில் உன்னை மறைத்து கொள்ள ஆசை !!!
தாமரை மலரின் தரிசனம் பார்க்க ஆசை !!!
சிம்னி வெளிச்சத்தில் சிப்பிக்குள் முத்து பார்க்க ஆசை !!!
உன்னோடு தண்ணிர் பிடித்து வர ஆசை !!!
உச்ச போகும் போது துணைக்கு வர ஆசை !!!
உன் தலை கோதி தூங்க வைக்க ஆசை !!!
நீ தூங்க நான் முழித்து இருக்க ஆசை !!!
காலை சோம்பல் முறிக்கும் அழகை ரசிக்க ஆசை !!!
மாமா இன்னும் ஒரு 5 நிமிடம் என்று கொஞ்ச வைக்க ஆசை !!!
என் உதட்டால் ஊட்டி விட ஆசை !!!
உன் கை பிடிச்சி மழை நேர வேளையில் சுற்றி வர ஆசை !!!
என் ஆடை விலகாமல் நீ பிடித்து வர ஆசை !!!
இரவெல்லாம் உன்னோடு பேச ஆசை !!!
உன் மார்பில் சாய்ந்து அழ ஆசை !!!
தாலி கட்டி மனைவியாக்க ஆசை !!!
கெஞ்சி கெஞ்சி கொஞ்சி பேசிட ஆசை !!!
தூங்கும் பொது காதோரம் பேச ஆசை !!!
பைக் பயணத்தில் பின் கழுத்தில் முத்தம் வங்க ஆசை !!!
மொத்தத்தில்
உன்னோடு உன்னோடு வாழ்ந்து மடிய ஆசை !!!