Wednesday, January 4, 2017

மாடி சாய்ந்த தருணம்


என் மாடி சாய்ந்த  தருணம்
என்னையும்  தாயான உணரவைத்தாள்



கனவுகள் நிஜமாகும்

அவள்  கனவுகளை  திருடி
என் கருவறையில்
புதைத்தேன்
நிஜமாகும் வேளை
இமை மூடும் தூரமே


அவள் நினைவுகள்


எனக்கென வயசுக்குவந்த வான் மழையோ 
உன்னில் நனைய  உருகி நிற்கிறேன் 
என்னில் வருவாயோ நம்மில் கரைய 

மணல் அலை மேடாக உன் மேனி 
மனமோ மக்கி கிடக்குது மடி மேல 
தலை தூக்கி திரியுறேன் 
தணித்து விட தரிசனம் போதுமடி 

நம் இரவை பகலாக்க
சிம்மினி விளக்குல திரி போட்டு
தீ பந்தம் ஏத்திடவா 

இடுப்பு கொடி மணி ஓசை கேட்டு 
உண்டியலில் சேர்த்து வைத்த 
சில்லறை துட்டைய் சிதறியது என் மனம் 

காது மடலில் என்  உதட்டால் போடும் கோலம் 
தொட்டாய்சிணுங்கியாய் சிணுங்குகிறாய் 
மூச்சு காத்து புயல் காத்தாய் வீச 
மூர்ச்சை அடைந்து 
மார்பு புதரில் புதைந்துவிட்டாய்